கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் 5 பேர் பரிதாப சாவு, ஒருவர் கவலைக்கிடம்

சிதம்பரம் அருகே குமாரக்குடி எனுமிடத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் இறந்தனர்.

News image
Updated On :28 ஜூன் 2014, 5:31 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே குமாரக்குடி எனுமிடத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் இறந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர்  பிரகாஷ் (27). சென்னை பல்லாவரத்தில் கேண்டீன் வைத்துள்ள இவர் தனது மனைவி பிரியதர்ஷனி (24), மகன் மாதேஷ்கண்ணன் (3), பிரியதர்ஷனி தாய் யசோதை (48), மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவசுப்ரமணியன் (27), இவரது தம்பி இளையராஜா (26) ஆகிய 6 பேர் டாடா இண்டிகா காரில் சென்னையிலிருந்து ஒரத்தநாடு நோக்கி சனிக்கிழமை அதிகாலை சென்றுள்ளனர்.

அப்போது சிதம்பரம் அருகே குமாரக்குடி எனுமிடத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சிமெண்ட்  லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ், பிரியதர்சினி, மாதேஷ்கண்ணன், யாசோதை, இளையராஜா ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவசுப்ரமணியன் படுகாயம் அடைந்த நிலையில் கடலூர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சோழதரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து உடல்களை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.