விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம்

News image
Updated On :28 ஜூன் 2014, 10:04 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற உண்ணாவிரத்தைத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி கல்வி மாவட்டம் அமையும் அளவிற்கு பள்ளிகள் பெருகியுள்ளன. பள்ளிக் கல்வியிலிருந்து மாணவர்கள், உயர் கல்வி பெற கல்லூரிகள் அவசியம். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நானும், எனக்கு முன்பு இருந்த சட்டப் பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம். தற்போது அரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னர் உயர் கல்வித் துறை அமைச்சரிடம் இக் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுயில் அரசு கலைக் கல்லூரி அமையும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று தொகுதி மக்கள் நம்புகிறார்கள். நடப்பு கல்வியாண்டிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி, முன்னாள் எம்.பி.கள் பொ.லிங்கம், வெ.அழகிரிசாமி, ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் வி.வீரபாண்டியராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்.பாலசுப்பிரமணியன், மகாத்மா அறக்கட்டளையின் வி.கலா, வழக்குரைஞர் எம்.முத்துவேல் நாச்சியார், எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் எஸ்.வேதநாயகம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

உண்ணாவிரதத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கல்லூரியின் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையிலும், தொகுதி மக்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையின் மீது ஒரே கருத்து நிலையில் இருக்கிறோம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 28-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.