/

எஸ்.ஐ. அடித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை

வாலாஜாபாத்தில் கோயில் திருவிழாவில் மது அருந்திவிட்டு நடனம் ஆடிய இளைஞரை எஸ்.ஐ. அடித்ததால் மனமுடைந்த இளைஞர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Updated On :1 மார்ச் 2014, 2:27 pm

வாலாஜாபாத்தில் கோயில் திருவிழாவில் மது அருந்திவிட்டு நடனம் ஆடிய இளைஞரை எஸ்.ஐ. அடித்ததால் மனமுடைந்த இளைஞர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜாபாத் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (23), தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேரு நகர் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலையத்தில் சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது.இதில் கார்த்திக் மது அருந்திவிட்டு நடனம் ஆடிக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜாபாத் சப்-இன்ஸ்பெக்டர், கார்த்திக்கை அடித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கார்திக் இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறி வருத்தமடைந்துள்ளார். மேலும் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனால் அதிர்சியடைந்த கார்திக்கின் மனைவி ப்ரீத்தியும்(20) தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ப்ரீத்தியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கார்திக்கின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்திபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.