நெல் மண்டி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுகத்அலி (35). இவர் காட்டுமன்னார்கோயில் செட்டித்தெருவில் நெல் மண்டி நடத்தி வருகிறார். நெல் வியாபாரிகளுக்கு


காட்டுமன்னார்கோயிலில் நெல் மண்டி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடு போனது.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுகத்அலி (35). இவர் காட்டுமன்னார்கோயில் செட்டித்தெருவில் நெல் மண்டி நடத்தி வருகிறார். நெல் வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, அதே தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வியாழக்கிழமை பணம் எடுத்துள்ளார்.
பின்னர் அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு, அருகாமையில் உள்ள உறவினர் துணிக்கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...