நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அண்ணாமலைப் பல்கலையில், இளநிலை உதவியாளர்களுக்கு கணினி பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பயிற்சி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில், பல்கலைக்கழக இளநிலை உதவியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான கணினி

News image
Updated On :7 மார்ச் 2014, 12:49 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பயிற்சி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில், பல்கலைக்கழக இளநிலை உதவியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான கணினி பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பயிற்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்நாள் கற்றல் துறை 15 நாட்களுக்கு அளிக்கிறது. பயிற்சியில் 36 இளநிலை உதவியாளர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி தொடக்க விழாவிற்கு துறைத் தலைவர் முனைவர் தி.ரங்கசாமி தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் ஊழியர்கள் கண்டிப்பாக கணினி பயன்படுத்தும் திறன் வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் என்றார்.

பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும், வேளாண் புல முதல்வருமான ஜே.வசந்தகுமார் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் அலுவலர் ஊழியர்கள் கணினியில் திறன் வளர்த்துக் கொள்ள இப்பயிற்சி அவசியமாகும். கணினியில் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அரசு உத்தரவுகள், நடைமுறைகள், விண்ணப்பங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அதற்காகு எந்தந்த இணையதழக்கை பயன்படுத்த வேண்டும் எண்பது குறித்து விளக்கமளி்த்தார்.

பேராசிரியர் ஆர்.மயிலநாராயணன் வரவேற்றார். கணினி பயிற்சியாளர் மணிவாசகன் நன்றி கூறினார். விழாவில் தொலைதூரக்கல்வி இயக்கக கல்வியல் துறைத் தலைவர் எம்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.