18ம் நூற்றாண்டை சேர்ந்த பெண்ணின் நடுகல்
பழனி நகரின் மையத்தில் பலஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவது வையாபுரிக்குளம். இக்குளத்தில் பல்வேறு அரிய வரலாற்றுத்தகவல்கள் புதைந்துள்ளது. கடந்த


பழனி வையாபுரி கண்மாய் கரையில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த பெண்ணின் நினைவுக்கல் கண்டறியப்பட்டுள்ளது.
பழனி நகரின் மையத்தில் பலஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவது வையாபுரிக்குளம். இக்குளத்தில் பல்வேறு அரிய வரலாற்றுத்தகவல்கள் புதைந்துள்ளது. கடந்த சிலமாதங்களுக்கு முன் இங்கு நடைபெற்ற ஆய்வில் பழனி நகர் அழிந்து மீண்டும் உருவான தகவல்கள் கிடைத்துள்ளது. பல தகவல் அடங்கிய சிலகற்கள் தோண்ட முடியாத ஆழத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த குளத்தின் கரையில் ஒரு பெண்ணின் சிலை கண்டறியப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கல்யாணசுந்தரி, செல்வநாயகி, திலகவதி ஆகியோர் மேற்கொண்டனர்.
ஆய்வில் கண்டறியப்பட்ட சிலை கி.பி.18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், அது இறந்து போன பெண்ணின் நினைவுக்கல் என்றும் தெரியவருகிறது. 64செ.மீ உயரமும், 45 செ.மீ அகலமும் கொண்ட பெண்சிலைக்கு இருபுறமும் கன்றுக்குட்டிகள் பெண்ணை நோக்கி பாதி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் பெருளவு சிதைந்துள்ளது. பொதுவாகவே நினைவுக்கற்கள் கிராமத்தையோ, நகரத்தையோ காப்பாற்றியவர்களுக்கு பெரும்பாலும் அமைக்கப்படுவது வழக்கம். பழனி வையாபுரிகுளத்தில் பழனி நகரம் அழிந்த செய்திகள் உள்ளன.
ஆகவே, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு, மாடு மேய்க்கும் இந்த பெண் வெள்ளபெருக்கு அல்லது மதகு உடைப்பின் போது ஊரை காப்பாற்றும் முயற்சியில் குளத்தில் விழுந்து உயிர்த்தியாகம் செய்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக அப்பெண்ணுக்கு வையாபுரி குளத்தின் கரையில் நினைவுக்கல் எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...