தேர்தல் விளம்பரம். அதிமுக, கொங்கு இளைஞர் பேரவை மீது வழக்குப் பதிவு
பழனி அருகே மேல்கரைப்பட்டி பயணிகள் நிழற்கூரை இடத்தில் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுவை வரவேற்று விளம்பரம் செய்திருந்த மேல்கரைப்பட்டி ரவி மீது கிராம நிர்வாக அலுவலர்


பழனியில் தேர்தல் விளம்பரம் தொடர்பாக அதிமுக, கொங்கு இளைஞர் பேரவையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி அருகே மேல்கரைப்பட்டி பயணிகள் நிழற்கூரை இடத்தில் கொங்கு இளைஞர் பேரவை தனியரசுவை வரவேற்று விளம்பரம் செய்திருந்த மேல்கரைப்பட்டி ரவி மீது கிராம நிர்வாக அலுவலர் சிவசண்முகம் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி டவுன் பகுதியில் ஆர்.எப்.ரோடு பகுதியிலும், அ.கலையமுத்தூர் சுடுகாடு சுவற்றிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் விளம்பரம் தொடர்பாக விளம்பரம் செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், 9வது வட்ட பிரதிநிதி சிவசுப்பிரமணி மீதும் பழனி டவுன், தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...