பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்
பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி திருக்கம்பம் சாட்டுதலும், மார்ச்.4ம் தேதி


பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மாசித் திருவிழா திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி திருக்கம்பம் சாட்டுதலும், மார்ச்.4ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தலும் நடைபெற்றது. பூவோடு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, சூடச்சட்டி எடுத்தும், கம்பத்துக்கு பால், பன்னீர் ஊற்றியும், முளைப்பாரி எடுத்தும் வழிபட்டு வந்தனர். விழா நாட்களில் அருள்மிகு மாரியம்மன் சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் இரதவீதி உலா எழுந்தருளினார். அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அருள்மிகு மாரியம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
புதன்கிழமை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 9மணிக்கு பாதிரிப்பிள்ளையார் கோயிலுக்கு தீர்த்தம் எழுந்தருளலும், மதியம் 3 மணிக்கு அம்மன் திருத்தேர் ஏற்றமும் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. தேரில் பட்டாடை, நகைகள், வண்ணமாலைகள் சகிதமாக அம்பாள் எழுந்தருள சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. தேரின் முன்னே பக்தர்கள் தேரை இழுக்க, தேரின் பின்னே திருக்கோயில் யானை கஸ்தூரி தேரை தள்ளியது. நான்குரத வீதிகள் உலாவந்த திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் கைதட்டி அரோகரா கோஷங்கள் எழுப்பினர். தேரின் முன்பு வந்த பக்தர்களை போலீஸார் விரட்டியதால் தேரின் பின்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் பொதுமக்களும், பக்தர்களும் அதிருப்தி அடைந்தனர். இரவு 9மணிக்கு அம்மன் வண்டிக்கால் பார்த்தல், வானவேடிக்கை நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 3மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தலும், அம்பாள் வெள்ளிக்காமதேனு வாகனத்தில் உலா எழுந்தருளலும், இரவு 10மணிக்கு திருக்கொடி இறக்கமும் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, திருக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து, காணியாளர் நரேந்திரன், முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், அரிமா சுந்தரம், நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...