பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

பழனி அருகே ஆயக்குடி நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(30).  இவர் கணக்கன்பட்டி கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு திருமணமாகவில்லை.  இந்நிலையில் தேர்தல் நடத்தை

News image
Updated On :14 மார்ச் 2014, 3:25 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் தொடர் விடுப்பு குறித்து தகவல் அளிக்காமல் சென்ற கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பழனி அருகே ஆயக்குடி நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(30).  இவர் கணக்கன்பட்டி கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு திருமணமாகவில்லை.  இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும்படி உத்திரவிடப்பட்ட சசிக்குமார் கடந்த சில தினங்களாக அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்துள்ளார்.  அவர் எங்குள்ளார் என்று தெரியாத நிலையில் கணக்கன்பட்டியில் சுவாமிகள் ஒருவர் இறந்ததால் பரபரப்பான சூழலும் ஏற்பட்டது.  இதுகுறித்த தகவலும் வருவாய்துறைக்கு தாமதமாகவே கிடைத்துள்ளது.  ஆகவே, பழனி தாசில்தார் வரதராஜன் பரிந்துரையின் பேரில் பழனி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ் சசிக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.