தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனி வருவாய் கிராமம் தேவை: ஊர் மக்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு

திருக்கோவிலூர் அருகே டி.ஜெகப்பாளையம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும்,  ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கவும் முடிவு செய்தனர். 

News image
Updated On :14 மார்ச் 2014, 10:27 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே டி.ஜெகப்பாளையம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும்,  ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கவும் முடிவு செய்தனர். 

இந்த கிராமம் 1944ல் ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு 1971ல் ஊராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இது, தொடர்ந்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்கப்படவில்லை.

பின்னர், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியில் இந்த கிராமம் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கிராமத்துக்கு வரவேண்டிய வருவாய் சித்திலிங்கமடம் கிராமத்துக்குப் போவதால், இந்த கிராமத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடிவதில்லையாம். இதனால், கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர் இந்த கிராம மக்கள். ஆனால் அதிகாரிகளின் சமரசத்தால், மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் குடி புகும் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்ததால் அப்போது வாக்களித்தனராம். ஆனால் இந்த முறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.