பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தலைமையாசிரியைக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

பழனி டாக்டர் திருமலைநகரை சேர்ந்தவர் ஜோசப் எட்வர்டு ஜான்.  இவரது மனைவி விக்டோரியா மேரி(42).  விக்டோரியா மேரி பழனி அருகே புங்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்

News image
Updated On :15 மார்ச் 2014, 12:44 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே பள்ளி தலைமையாசிரியையைக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி டாக்டர் திருமலைநகரை சேர்ந்தவர் ஜோசப் எட்வர்டு ஜான்.  இவரது மனைவி விக்டோரியா மேரி(42).  விக்டோரியா மேரி பழனி அருகே புங்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக வேலை செய்து வருகிறார்.  அதே பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக வேலை செய்பவர் லட்சுமணக்குமார்.  இவருக்கும், தலைமையாசிரியைக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லட்சுமணக்குமார் தலைமையாசிரியை மேரியை தரக்குறைவாக பேசியதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். 

இதையடுத்து தலைமையாசிரியை விக்டோரியாமேரி வெள்ளிக்கிழமை கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் லட்சுமணக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.