தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தயாநிதிமாறன், ஆ.ராசா வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்: பி.ஹெச்.பாண்டியன்

தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் என்றார் அ.தி.மு.க. அமைப்புச் செயலர் பி.ஹெச்.பாண்டியன்.

News image
Updated On :16 மார்ச் 2014, 12:01 pm

முத்துகுமார்

தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் என்றார் அ.தி.மு.க. அமைப்புச் செயலர் பி.ஹெச்.பாண்டியன்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பி.ஹெச்.பாண்டியன் மேலும் பேசியதாவது:

எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதன்முதலில் தேர்தல் ஆணையத்திடம் சின்னத்தைப் பெற்று வந்தபோது இருந்த அ.தி.மு.க. குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். இப்போது இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டுமென தி.மு.க.வினர் வழக்கு தொடுத்துள்ளனர். அதற்கு அவர்களது பயமே காரணம்.

அ.தி.மு.க.வின் சின்னத்தை மறைக்கவோ, வெற்றியைத் தடுக்கவோ யாராலும் முடியாது.  எதிர்க்கட்சிகளின் சின்னத்தை மறைக்க வேண்டுமென அ.தி.மு.க. ஒருபோதும் கோரியதில்லை. மக்களோடு கூட்டணி அமைத்து தனியொரு கட்சியாக தேர்தலைச் சந்தித்து வருகிறது.

வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பே அ.தி.மு.க. பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தொண்டர்கள் உழைக்கத் தொடங்கும் முன்பே வெற்றிச் செய்தி கிடைத்திருப்பதால் உற்சாகம் அதிகரித்துள்ளது. இதனுடன் கடும் உழைப்பும், கூட்டுமுயற்சியும் சேரும்போது 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது நிச்சயம்.

தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தயாநிதிமாறன், அ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு,  மக்களவைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியிருக்கையில் அந்தக் குழுவின் அறிக்கை, நீதிமன்ற உத்தரவுகளைப் போன்றதுதான். எனவே, தயாநிதிமாறன் மற்றும் ஆ.ராசா ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவர்களது மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.