நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருமாவளவன் வெற்றிக்கு பாடுபடுவது: மனித நேய மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பெருவாரியான வாக்குகள்

News image
Updated On :16 மார்ச் 2014, 9:17 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறச்செய்ய பாடுபடுவது என மனித நேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் நடராஜா கார்டனில் மனித நேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில மண்டல அமைப்புச் செயலாளர் முகமது ஜெயின்னுலாபுதீன் தலைமை வகித்துப் பேசினார். கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் முகமது அய்யூப் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் இஸ்மாயில் வரவேற்றார். பி.முகமதுஅலி நன்றி கூறினார்.

கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய பாடுபடுவது என்றும், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.