வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லையில் மாநகராட்சி அலுவலகம் திடீர் முற்றுகை

போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை சிறுவியாபாரிகள் திங்கள்கிழமை திடீரென முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2014, 9:26 am

ஷேக் அப்துல்காதர்

போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை சிறுவியாபாரிகள் திங்கள்கிழமை திடீரென முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நகரம் 42 ஆவது வார்டு கரியமாணிக்கப்பெருமாள் கோயில் தெரு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மாலை நேரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளிடம், அங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என போலீஸார் தெரிவித்தனராம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருவதாகவும், கடைகள் திறக்காவிடில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.பின்னர் மாநகராட்சி ஆணையர் அர. லட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்பகுதியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.