நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் தொகுதியில் மந்தை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள்!

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கிராமப்புறங்களில் இரவு நேரத்தில் சென்று, அங்குள் மக்களை ஒரு இடத்தில் திரட்டி சற்று வித்தியாசமாக மந்தை பிரசாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு

News image
Updated On :17 மார்ச் 2014, 12:32 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கிராமப்புறங்களில் இரவு நேரத்தில் சென்று, அங்குள் மக்களை ஒரு இடத்தில் திரட்டி சற்று வித்தியாசமாக மந்தை பிரசாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவனை வெற்றி பெறச் செய்ய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு சிதம்பரத்தில் முகாமிட்டு பல்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை முதல் கிராமப்புறங்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு குழுக்களாக சென்று, அங்குள்ள மக்களை திரட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கடந்த 5 ஆண்டுகள் எம்பியாக இருந்த போது தொகுதியில் ஆற்றிய பணிகள்?, ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சு மற்றும் உரையாடல் நடையில் சற்று வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரசாரத்திற்கு மந்தை பிரசாரம் என பெயர் வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.