தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மு.க. அழகிரி ஆதரவு அளித்தால் அதனை ஏற்பேன்:எஸ்.எஸ்.ராமசுப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி. ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருநெல்வேலிக்கு வந்தார். அவருக்கு

News image
Updated On :23 மார்ச் 2014, 11:01 am

முத்துகுமார்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எனக்கு, மு.க. அழகிரி ஆதரவு அளித்தால் அதனை ஏற்பேன் என்றார் எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி. ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருநெல்வேலிக்கு வந்தார். அவருக்கு காங்கிரஸார் மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். காமராஜர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர்,  இந்திராகாந்தி மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மக்களின் குரலை, மக்களவையில் பதிவு செய்த எனக்கு காங்கிரஸ் சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு ஜாதி, சமய வேறுபாடுகளின்றி நான் செய்துள்ள பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதனுடன் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரிப்பேன்.

இந்தியாவில் எந்த அலையும் வீசவில்லை குறிப்பாக மோடி அலை வந்த வேகத்தில் ஓய்ந்துள்ளது. 83 கோடி மக்கள் காங்கிரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டம் எங்களுக்கு வெற்றியை தேடித்தரும். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு (எஸ்.எஸ்.ராமசுப்பு) மு.க. அழகிரி ஆதரவு அளித்தால் அதனை ஏற்பேன்.

காவல்கிணறில் ரயில் நிலையம் ஏற்படுத்துதல், நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்துதல் போன்ற பணிகள் உள்ளன. அந்தப் பணிகளை விரைவாக முடிக்க மக்களைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற பொதுமக்கள் உதவ வேண்டும் என்றார் அவர்.

ஆலோசனைக் கூட்டத்தில்  மாநகர் மாவட்டத் தலைவர் ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மேற்கு மாவட்டத் தலைவர் அப்பாதுரை, சுத்தமல்லி முருகேசன், சங்கரபாண்டியன், அமீர்கான், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.