தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சு.சிவனனைந்தபெருமாள்

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர்

News image
Updated On :23 மார்ச் 2014, 11:29 am

முத்துகுமார்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் தே.மு.தி.க. வேட்பாளராக சு.சிவனனைந்தபெருமாள் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 21-ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது வேட்பாளரை அறிவித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இத் தொகுதியின் வேட்பாளராக மாகாராஷ்டிர மாநில தே.மு.தி.க. செயலர் சு.சிவனனைந்தபெருமாள் போட்டியிடுவார் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு உள்பட்ட சௌந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சிவனனைந்த பெருமாள். இவரது பெற்றோர் சுந்தரம்-பொன்னம்மாள். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சோமுகி, சக்திகாவ்யா என்ற மகள்களும், சச்சின்ராஜா என்ற மகனும் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், தாராவியில் பிரின்டிங் பிரஸ் தொழிலும், ராதாபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.இதுகுறித்து வேட்பாளர் சு.சிவனனைந்தபெருமாள் கூறியதாவது:

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளே முழுமை பெறாமல் உள்ளது. அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குசேகரிப்பேன்.

2006-ம் ஆண்டு தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டபோது ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரத்து 504 வாக்குகள் பெற்றேன். ஆனால், இப்போது தே.மு.தி.க.வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்துள்ளது. இதனுடன் கூட்டணிக் கட்சிகளின் பலமும் சேர்ந்துள்ளதால், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி உறுதியாகியுள்ளது. கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.