தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தந்தை வெட்டிக் கொலை: மகனுக்கு ஆயுள் சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பசுக்கிடைவிளையைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருக்கு சின்னக்கண்ணு என்ற சின்னகண்ணன் (29) உள்பட 5 குழந்தைகள். மனைவியுடன்

News image
Updated On :26 மார்ச் 2014, 2:59 pm

முத்துகுமார்

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பசுக்கிடைவிளையைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருக்கு சின்னக்கண்ணு என்ற சின்னகண்ணன் (29) உள்பட 5 குழந்தைகள். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், முத்துக்குட்டி தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 2-4-2014 அன்று முத்துக்குட்டிக்கும், சின்னகண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முத்துக்குட்டி இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து சின்னகண்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட சின்னகண்ணனுக்கு ஆயுள் சிறைதண்டனையும், ரூ.7 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.இவ் வழக்கில் போலீஸார் தரப்பில், திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.