அம்பை அருகே தீயில் கருகி ஆட்டுக்குட்டிகள் பலி
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் விவசாயிகள், தொழிலாளர்கள் கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகின்றனர். வெள்ளங்குளி கோரையாற்றுக்கு மேற்குப் பகுதியில் வயல் வெளியில்


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 30 ஆட்டுக்குட்டிகள் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கருகி இறந்தன.
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் விவசாயிகள், தொழிலாளர்கள் கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகின்றனர். வெள்ளங்குளி கோரையாற்றுக்கு மேற்குப் பகுதியில் வயல் வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிடையில் 300 க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்துள்ளனர். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல், குட்டிகளுக்கு பால் கொடுத்த பிறகு ஆடுகளை தொழிலாளர்கள் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர். பிறந்து சில தினங்கள் ஆன 30க்கும் மேற்பட்ட குட்டிகள் மட்டும் கிடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை நண்பகலில் திடீரென ஆட்டுக்குட்டிகள் அடைத்து வைத்திருந்த கூண்டு தீப்பற்றி எரிந்தது. இதில் ராமர், மாடக்கண்ணுக்கு சொந்தமான 30 குட்டிகள் தீயில் கருகி இறந்தன.
இந்த சம்பவம் குறித்து போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...