காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளிப்பு
பழனி அருகே காதலித்தவர் ஏமாற்றியதால் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.


பழனி அருகே காதலித்தவர் ஏமாற்றியதால் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
பழனி அருகே சத்திரப்பட்டி புதுக்கோட்டை 1வது வார்டை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் விஜயபாரதி(23). இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பழனியில் அழகு நிலையம், தையல் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்கு சென்று வருகிறார். இவரது அப்பா கடந்த 13 வருடத்துக்கு முன் இறந்து விட்டார்.
இவர் புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் மதிவாணன் என்பவரை கடந்த ஆறு மாத காலமாக காதலித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் சந்தித்த மதிவாணன் தாசரிபட்டி பிரிவு கருங்குளம் புதர்பகுதியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மானபங்கம் செய்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனம் வெறுத்த விஜயபாரதி வியாழக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் மதிவாணண் மீது சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...