சங்கராலயத்தில் உலக சுபிட்சம், மழை வேண்டி சிறப்பு பூஜைகள்
பழனி அடிவாரம் சங்கராலயத்தில் வெள்ளிக்கிழமை உலக சுபிட்சம், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


பழனி அடிவாரம் சங்கராலயத்தில் வெள்ளிக்கிழமை உலக சுபிட்சம், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி அடிவாரம் சங்கராலயத்தில் வெள்ளிக்கிழமை அக்க்ஷய திருதியை முன்னிட்டு உலக சுபிட்சம், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளை கங்கோத்ரி காளிகாம்பாள் பீடம் நாராயண தீர்த்த சுவாமிகள் செய்தார். காவடிபூஜை நடத்தப்பட்டு, தொடர்ந்து கோபூஜை நடைபெற்றது. பின்னர் மழைவேண்டி அகமர்ஷ்ண மந்திரங்கள், யஜூர் வேதத்தில் இருந்து பாடல்கள் பாடப்பட்டது. பூஜைகளில் முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள், சிவக்குமார், அரக்கோணம் சௌந்தர்ராஜ், ஆடிட்டர் அனந்தசுப்ரமண்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவை மூன்று முறை நடைபயணமாக சுற்றிவந்தவர் கங்கோத்ரி காளிகாம்பாள் பீடம் நாராயண சுவாமிகள். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆர்ட்டீஸம் என்ற குறைபாடுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவரது சிகிச்சையினால் குறை நீங்கியுள்ளனர்.
பூஜை நிறைவில் கங்கோத்ரி நாராயண சுவாமிகள் தெரிவித்ததாவது, தமிழகத்தில் மழை மிகவும் குறைந்துவிட்டது. நதிகள் வழிபாடு குறைந்ததே இதற்கு காரணமாகும். தாமிரபரணி, காவேரி போன்ற நதிக்கரைகளில் நதிவழிபாடுகள் நடத்தப்படவேண்டும். நதிவழிபாடு குருவழிபாட்டுக்கு சமம். நதிகளை வணங்கினாலே மழைபொழிவு குறையாமல் இருக்கும் என வேதங்கள் கூறுகின்றது. மேலும் பல கோயில்களில் ஐந்து கால பூஜைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
வழிபாடுகள் பெருகினால் விவசாயம் செழிக்கும். தானியங்கள் அதிகரிக்கும். கங்கோத்ரி காளிகாமட் சார்பில் தமிழகத்தில் வரும் ஜூன் மாத இறுதியில் உலக ஷேமம், மழை வேண்டி சப்தகோடி ஜபம் நடைபெறவுள்ளது. இதற்காக கோவில்பட்டி, ராஜபாளையம், பழனி, குற்றாலத்தை அடுத்த புளியரை, பாபனாசம், சென்னையை அடுத்த ராணிப்பேட்டை மற்றும் திருச்சி திருவானைக்காவல் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் தேர்வு செய்யப்பட்ட வேதவிற்பன்னர்களைக் கொண்டு தினமும் ஐந்து இலட்சம் காயத்ரி ஜெபங்கள் என இருபத்தோரு நாட்கள் உச்சரிக்கப்படும். ஏழு ஊர்களிலும் ஒரே நேரத்தில் இந்த பூஜை நடத்தப்படும் என கங்கோத்ரி நாராயண சுவாமிகள் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...