கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெண் கஞ்சா வியாபாரி கைது: ஸ்ரீவிலி. பெண் சார்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்து அழைத்து வந்த பெண் சார்பு ஆய்வாளரை மண்வெட்டியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா விற்ற பெண்ணின் சகோதரி கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :2 மே 2014, 10:54 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்து அழைத்து வந்த பெண் சார்பு ஆய்வாளரை மண்வெட்டியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா விற்ற பெண்ணின் சகோதரி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி காவல் நிலைய பெண் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி, வெள்ளிக்கிழமை வைத்தியலிங்காபுரம் தேவர் சாவடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த இடத்தில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வைத்தியலிங்காபுரம், தேவர் தெருவைச் சேர்ந்த நல்லமாயன் மனைவி பேச்சியம்மாள் (50) என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீஸார் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

வைத்தியலிங்காபுரம், மெயின் பஜார் வழியே பேச்சிய்ம்மாளை சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி அழைத்து வரும் போது, அவ்வழியே வந்த பேச்சியம்மாளின் சகோதரி துரைப்பாண்டி மனைவி பொன்னுத்தாய் (54) என்பவர் சார்பு ஆய்வாளரை வழிமறித்து, ஆபாசமாகப் பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, தான் வைத்திருந்த மண்வெட்டியைக் காட்டி, சார்பு ஆய்வாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பொன்னுத்தாயைக் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்ற பேச்சியம்மாளும் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.