கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி வேன் மோதி இளைஞர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :2 மே 2014, 7:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கா.அகமது பயாஸ் (24). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். வண்டியின் பின்னால் ஸ்ரீவில்லிபுத்தூர், முஸ்லீம் தெருவைச் சேர்ந்த மைதீன் பிச்சை மகன் இப்ராஹிம் (18) என்பவர் உட்கார்ந்து வந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் ஜான்கென்னடி பெட்ரோல் பல்க் அருகே வந்த போது எதிரே வந்த லோடு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அகமது பயாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பலத்த காயமுற்ற இப்ராஹிம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர், டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரைக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.