கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் ஜெய்ப்பூர், புனே, தில்லி, மும்பை ஆகிய தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதியான அசரப்அலி ஜெயப்பூர் போலீஸார் கடலூர் மாவட்ட போலீஸார் உதவியோடு வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். கடலூர் நீதிமன்றத்தில் அசரப்அலி ஆஜர்படுத்தப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோத்பூர் லைகன் மோகரா வசிக்கும் ஷபீர்அலி மகன் அசரப்அலி (39). இவர் இந்திய முகாஜூதீன் அமைப்புச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியாவார். அசரப்அலி ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளியாவார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மொத்தம் 5 பேர் தேடப்பட்டு வந்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அசரல்அலி போலீஸார் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளியாவார்.
கடலூர் மாவட்ட பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தீவிரவாதி அசரப்அலி தொழுகை செய்து, அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு, அங்கியே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் போலீஸார் செல்போன் டவர் மூலம் அவரது இருப்பிடத்தை அறிந்து வந்து கடலூர் மாவட்ட போலீஸார் உதவியுடன் வியாழக்கிழமை இரவு பள்ளிவாசலுக்கு சென்று அவரை கைது செய்தனர்.