கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் ஊழியர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

News image
Updated On :3 மே 2014, 1:34 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேரூராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

வ.புதுப்பட்டி, பிரசிடென்ட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ் மனைவி கார்த்திகேயனி (42). இவரது கணவர் அரசுப் பணியில் இருந்த போது இறந்துவிட்டார். எனவே இவரது மனைவி கார்த்திகேயனிக்கு கருணை அடிப்படையில் வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டு, இப் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை கிருஷ்ணன்கோவில் கண் மருத்துவமனைக்கு போவதற்காக கார்த்திகேயனி தனது ஊரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்து இறங்கியுள்ளார். எதிர் திசையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார்த்திகேயனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.