/

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

பழனி அருகே வி.கே.மில்ஸ் விஜயபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.  இவர் நிதிநிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.  கடந்த 29ம் தேதி மாரடைப்பால் சதீஷ்குமார் இறந்துபோனார்.  இந்நிலையில் இவரது இறப்பை தாங்காமல் மனைவி சௌமியாப்ரியா(24), மாமனார் ராஜாமணி(

News image
Updated On :3 மே 2014, 1:32 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்.

பழனி அருகே வி.கே.மில்ஸ் விஜயபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.  இவர் நிதிநிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.  கடந்த 29ம் தேதி மாரடைப்பால் சதீஷ்குமார் இறந்துபோனார்.  இந்நிலையில் இவரது இறப்பை தாங்காமல் மனைவி சௌமியாப்ரியா(24), மாமனார் ராஜாமணி(55), மாமியார் சத்யா(50) மற்றும் மனைவி சகோதரி சவுந்தர்யப்ரியா(19) ஆகியோர் கடந்த சிலநாட்களாக சோகமாக இருந்துள்ளனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நான்கு பேரும் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  காலை 8 மணியாகியும் யாரும் வராததால் உறவினர்கள் வந்து பார்த்த அனைவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நான்கு பேரும் பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.