தருமபுரியில் அன்புமணியை வெற்றி பெறச்செய்வதும், சிதம்பரத்தில் திருமாவளவனை தோற்கடிக்கச் செய்வதுமே இந்த தேர்தலில் பாமகவின் அறிவிக்கப்படாத திட்டமாகும். காட்டுமன்னார்கோயில் அருகே ஈச்சம்பூண்டி, வேலப்பூண்டியிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தலித்துகள் மீதான தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலும், பதற்றத்திலும் பெரும்பாலான தலித் கிராமங்கள் உள்ளன. இந்த வன்கொடுமை தாக்குதள் குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்களோ கண்டிக்கவில்லை. தாக்குதலுக்கு ஆளான வடக்குமாங்குடி கிராம தலித்மக்கள் வேறு இடத்தில் குடியமர்த்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது தலித்துகளின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துகிறது. எனவே பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடத்திலே தலித்துகள் அச்சமின்றி வாழ உறுதி செய்ய வேண்டியது மாநில அரசும், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதன் மூலமே தலித்துகள் அந்த நம்பிக்கை ஏற்படுத்திட முடியும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்திட திட்டமிட்டுள்ளது என பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.