ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் 15 பவுன் செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் அவர் அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள மூன்று செயின்களை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை

News image
Updated On :3 மே 2014, 5:16 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் அவர் அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள மூன்று செயின்களை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரசேகர். இவரது மனைவி மகாலட்சுமி (45). இவர் ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது கணவர் மோட்டார் சைக்கிளில் மகாலட்சுமி பின்னால் அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். கார்த்திகைபட்டி விலக்கு அருகே  இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இவர்களது வாகனத்திற்கு வலது பக்கமாக வந்து மகாலட்சுமி அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள 3 செயின்களை பறித்துச் சென்றுள்ளனர்.

இரு இளைஞர்களும் அருகில் இருந்த கிராமச் சாலை வழியே தப்பி ஓடியுள்ளார்கள். இவர்களை சுந்தரசேகர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க இயலவில்லை.

இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.