இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. தரம் பெற்ற, தரமான உதிரி பாகங்களை, அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களைக்கொண்டு ஊராட்சிகள் பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.கிராம ஊராட்சிகளில் மின் விளக்குகள் பழுது, குடிநீர் வழங்கும் பவர் பம்புகள் பழுது உள்ளிட்டவற்றை அந்தந்த ஊராட்சிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியிலிருந்து அவை பராமரித்து வருகின்றன. கடந்த காலங்களில் வருமான வரி மற்றும் விற்பனை வரி செலுத்தும் மின்சாதன விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு, கிராம ஊராட்சிகளுக்கு இதுபோன்ற பொருட்களை விநியோகிக்க ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிப்பார்கள். இதில் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையையும் மாவட்ட நிர்வாகம் அங்கீகாரம் செய்யும். விண்ணப்பிப்பவர்களில் தகுதியான சுமார் 20 ஒப்பந்ததாரர்களை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து இவர்களிடம் இருந்துதான் பொருட்களைப் பெற்று மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் வேலைகளை செய்ய வேண்டும் என்ற உறுதியான நடைமுறை இருந்தது.