/

பழனியில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் கணேசன்(39). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.  தற்போது பேன்சிகடை நடத்தி வரும் கணேசன் பைனான்ஸ் தொழிலும் நடத்தி வருகிறார்.  இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி உள்ளார்.  இவர் அதிமுக வார்டு பிரதிநிதி ஆவார்.

News image
Updated On :4 மே 2014, 3:27 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் கணேசன்(39). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.  தற்போது பேன்சிகடை நடத்தி வரும் கணேசன் பைனான்ஸ் தொழிலும் நடத்தி வருகிறார்.  இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி உள்ளார்.  இவர் அதிமுக வார்டு பிரதிநிதி ஆவார். ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் பழனியில் இருந்து பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் கழுத்தை அறுத்து கொலை செய்த நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அடிவாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  கொலையை நான்கு பேர் செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.  மேலும் கொலை செய்த நபர்கள் சென்னை ரயிலில் தப்பியிருக்கலாம் என் துப்பும் கிடைத்துள்ளதால் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.