வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியை எட்டியது!: பொதுமக்கள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியின் நீர்மட்டம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 46.05 ஏடியை எட்டியது.


கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியின் நீர்மட்டம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 46.05 ஏடியை எட்டியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால், சென்னை குடிநீர் அனுப்புவது பாதிக்கப்படும் என்பதால் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு நீர் திறந்துவிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 450 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.05 அடியை எட்டியது. ஏரியிலிருந்து விநாடிக்கு 77 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பப்படுகிறது.
காட்டுமன்னார்கோயிலில் பலத்த மழை: கடும் வெய்யலில் வறண்டு கிடந்த காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...