அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் 20 மாணவர்களுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் வேலைநியமன ஆணை!
அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் மருந்தியல்துறை மாணவர்கள் 20 பேருக்கு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத்தேர்வு முகாமில் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிய


அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் மருந்தியல்துறை மாணவர்கள் 20 பேருக்கு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத்தேர்வு முகாமில் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிய வேலைநியமன ஆணை வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தியல் துறை (B.Pharm., D.Pharm) இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு முகாம், சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டல் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அண்மையில் (மே.2) நடத்தப்பட்டது. வளாகத் தேர்வில் மருந்தியல்துறையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் 45 பேர் பங்கேற்றனர். இதில் 20 மாணவர்களை பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன கடிதத்தை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ந.பஞ்சநதம், பொறியியல் புல முதல்வர் செ.வேலுசாமி, மருந்தியல்துறைத் தலைவர் முனைவர் கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: கடந்த சில வருடங்களாக மருந்தியல் துறை சார்ந்த படிப்புகளான பி.ஃபார்ம், டி.ஃபார்ம் மற்றும் ஃபார்ம்.டி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பினை 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலை மருந்தியல் துறை மாணவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் பேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...