காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், அறிவுக்கரசன், வை.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பல்வேறு


காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், அறிவுக்கரசன், வை.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே.9-ம் தேதி கருட சேவையும், 12-ம் தேதி திருக்கல்யாணம் மறறும் புஷ்பபல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும், 14-ம் தேதி திருத்தேர் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ம் தேதி கஜஅவரோஹனத்துடன் பிரம்மோற்சவ விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பா.வேங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் என்.தோத்தாத்திரி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...