கீழணை மற்றும் வீராணம்ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்
தமிழக பொதுப்பணித்துறை (நீர்வளஆதாரம்) தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜ், செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கொள்ளிடக்கரை மற்றும்


தமிழக பொதுப்பணித்துறை (நீர்வளஆதாரம்) தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜ், செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கொள்ளிடக்கரை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் ரூ.26 கோடி செலவில் அணையை பலப்படுத்துதல், நீர்போக்கிகளை சரி செய்தல், ஷட்டர் சீரமைத்தல், பக்கவாட்டு கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரியை சென்று ஏரியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 46.50 அடி நீர் உள்ளதை பார்வையிட்டார்.
இதனையடுத்து கொள்ளிடக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணையையும், கீழணையில் எவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தலைமைப் பொறியாளருடன் கடலூர் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜி.சண்முகம், கொள்ளிடம் வடிநில கோட்ட செயற் பொறியாளர் செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன் (சிதம்பரம்), சரவணப்பெருமாள் (அணைக்கரை), உதவிப்பொறியாளர்கள் உமா, பாஸ்கர், முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்
எவ்வித அறிவிப்பின்ற ஆய்வு, விவசாயிகள் ஏமாற்றம்:
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜ் நீர்வளத்தை பெருக்குவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்தது பற்றி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்படாததால் வருத்தடைந்தனர். இதனையும் மீறி தலைமைப் பொறியாளர் ஆய்விற்காக வந்துள்ளதாக தகவல் அறிந்த பாசிமுத்தான்ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் சேத்தியாத்தோப்பு சென்று தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவித்து நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீரின்றி வறண்டு போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், ஆறு, வாய்க்கால்கள் வறண்டு போனதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் குடிநீரின்றி அவதியுறுகின்றன. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. வீராணம்ஏரியில் 46.50 அடி நீர் உள்ளது. எனவே ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக பிரதான வாய்க்கால்களில் நீர் திறந்துவிட வேண்டும் என்றும், நீரை தேக்கி வைக்க நிரந்தரமாக தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், தலைமைப் பொறியாளர் ஆர்.எமராஜிடம் கோரிக்கை விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...