ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கை கொடுக்கும் கோடை மழை: நெல்லை மாவட்ட அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2014, 6:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அணைகளின் நீர்மட்டம் குறைந்து வறண்டு வந்த சூழலில் மழையால் செவ்வாய்க்கிழமை பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டப் போதிலும், பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நீடிக்கும் மழையால் குற்றாலம் அருவிகள், திற்பரப்பு அருவி போன்ற அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையிலும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

இதனிடையே கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை இம்மாவட்டத்தில் பரவலாக பெய்தது. திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மானூர், பேட்டை, சுத்தமல்லி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, தென்காசி, வள்ளியூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.