சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத இருவர் சாவு
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் அருகே வல்லம்படுகை ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது,


சிதம்பரம் அருகே சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் அடிபட்டு அடையாளம் தெரியாத இருநபர்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் அருகே வல்லம்படுகை ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். பச்சைநிற கரை போட்ட வேட்டியும். நீலநிற கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
இதேபோன்று சிதம்பரம் அருகே கொத்தட்டை ஆளில்லாத ரயில்வே கேட் அருகே செவ்வாய்க்கிழமை மாலை சென்ற விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். மாநிறம் உள்ள இவர் முழுக்கை, வெள்ளை கோடு போட்ட நீலக்கலர் சட்டையும், மஞ்சள், கருப்பு கலர் கைலியும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் இருவரது உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...