/

சிதம்பரம் திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த அம்மன் சிலை!

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு

News image
Updated On :6 மே 2014, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வேங்கான்தெருவில் அமைந்துள்ள திருப்பாற்கடல் தீர்த்த குளத்தில் தூர்வாரும் போது உடைந்த நிலையிலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது திருபாற்கடல் தீர்த்தகுளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இக்குளத்தில் ஒன்றரை அடி உயரத்திலான உடைந்த நிலையிலான அம்மன் சிலை கிடைத்தது.

இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் சந்திரசேரன், ஜோதி.குருவாயூரப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் குளத்திற்கு வந்து கண்டெடுக்கப்பட்ட மிகபழமை வாய்ந்த அம்மன் சிலையை பார்வையிட்டு, அதனை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்புவதற்காக பெற்றுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.