/

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்க மதகுகளை உடனே இறக்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை போர்க்கால அடிப்படையில் இறக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னனி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்

News image
Updated On :7 மே 2014, 10:58 am

ஜி.சுந்தரராஜன்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை போர்க்கால அடிப்படையில் இறக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னனி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையில்  142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும், கேரள அரசு  முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றி இடிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது எனவும், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (7.05.2014) அளித்துள்ள தீர்ப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.

எனவே உடனடியாக முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை 142 அடி நீர் தேக்கும் வகையில் இறக்குமாறு தமிழக பொதுப்பணித்துறைக்கு ஆணையிடுமாறு தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி  வலியுறுத்துகிறது, இல்லையேல் 2006 –ல் தீர்ப்பு வந்தபோது செயல்படாததால் ஏற்பட்ட இழப்பை மீண்டும் சந்திக்க நேரிடும். ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அணையின் மதகுகளை இறக்கி 142 அடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கேட்டுக் கொள்கிறது என கி.வெங்கட்ராமன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.