பழனி வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடிவாரம் காவல்நிலையத்துக்கு அவரது தரப்பினர் தொடர்பாக ஒரு விளக்கம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் வினோதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கார்த்திக் கண்ணனை தரக்குறைவாக நடத்தியுள்ளனர். மேலும், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அலுவலகம் திரும்பிய கார்த்திக் கண்ணன் வழக்குரைஞர் சங்கத்தில் முறையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸாருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.