ஜல்லிக்கட்டுக்குத் தடை: பழனி அருகே எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி
பழனி அருகே நெய்க்காரபட்டியில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்ற தடையை தொடர்ந்து கிராமத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்திரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுஅமைப்புகளும் உச்சநீதிமன்ற தடைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழாவின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது. இதைக் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டினர் தமிழகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியில் சுமார் 100 ஆண்டு பழமையானது அருள்மிகு கோர்ட் காளியம்மன் திருக்கோயில், இங்கு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நெய்க்காரபட்டியில் ஏராளமான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. நெய்க்காரபட்டியில் ஏராளமான மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களும் உள்ளனர். மேலும், இந்த விளையாட்டை நடத்தும் விழாக் கமிட்டியினரும் உள்ளனர். இவர்களுடன் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர்.
இதுகுறித்து கிராமமக்கள் தெரிவித்ததாவது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் வேண்டுமென்றே சில அமைப்புகள் பிரச்னை கிளப்புகின்றது. இதை கண்டித்தே நாங்கள் கருப்புக்கொடி ஏற்றியுள்ளோம், இதுகுறித்து சட்டரீதீயாக எதிர்ப்பை காட்டுவோம். அரசும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...