நெல்லை மாவட்டத்தில் அடை மழை: குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்து வரும் அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த கொள்ளளவை கொண்ட குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.










