நெல்லை மாவட்டத்தில் 73 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 270 பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆயிரத்து 303 மாணவர்-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.


பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 73 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 270 பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆயிரத்து 303 மாணவர்-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 33 ஆயிரத்து 317 மாணவர்-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 94.37 ஆகும்.
இந்தத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 73 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகள்:
100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் விவரம் வருமாறு (தேர்ச்சிபெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை):
சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி (28), திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசினர் மேல்நிலைப் பள்ளி (105), பழவூர் அரசு மேல்நிலைப் பள்ளி (43), திருநெல்வேலி அரசு சேவைஇல்ல மேல்நிலைப் பள்ளி (30), நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி (52), வெள்ளங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி (38), கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி (30), பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (68).
தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்:
மேலஇலந்தைகுளம் இருதயா மேல்நிலைப் பள்ளி (151), விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி (110), நவலடி டி.எம்.என்.எஸ்.எஸ்.ஏ. மேல்நிலைப்பள்ளி (70), கோமதிபுரம் எஸ்.என்.ஆர். மேல்நிலைப் பள்ளி (90) உள்பட மொத்தம் 73 தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.
100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளிலேயே பாளையங்கோட்டையில் உள்ள சாராள்டக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் அதிகபட்சமாக 830 மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...