விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. வட்டார அளவில் லயன்ஸ் பள்ளி மாணவிகள் முதலிடம்

இப் பள்ளியில் தேர்வு எழுதிய 111 மாணவ மாணவியரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து இப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. இதில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 34 பேரும், 1000

News image
Updated On :9 மே 2014, 9:40 am

கோ.ஜெயக்குமார்

பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இப் பள்ளியில் தேர்வு எழுதிய 111 மாணவ மாணவியரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து இப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. இதில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 34 பேரும், 1000 முதல் 1100 மதிப்பெண்களுக்குள் 35 பேரும் பெற்றுள்ளனர்.

இவர்களின் கணிதத்தில் வீ.ரக்ஷினி, எம்.சுருதி, ஏ.எஸ்.அரவிந்த் அக்ஷன் ஆகிய மூவர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் வீ.ரக்ஷினி, வி.பொன்னாண்டாள், எம்.சுருதி, ஏ.எஸ்.அரவிந்த் அக்ஷன், எஸ்.லட்சுமி ஆகிய 5 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் ஜி.சரவணராஜ் என்ற மாணவரும், உயிரியல் பாடத்தில் மாணவி எம்.சுருதியும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாணவி வி.பொன்னாண்டாள் மற்றும் எம்.சுருதி ஆகியோர் 1183 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி வீ.ரக்ஷினி 1168 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.இம் மாணவ மாணவியரில் 9 பேருக்கு மருத்துவத்திற்கான கட் ஆப் 99.5 மதிப்பெண்களில் இருந்து 96 வரை பெற்றுள்ளனர் என முதல்வர் என்.கிரிஜா தெரிவித்தார்.

அதிகமான மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவ மாணவியரையும், இவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளிக் குழுத் தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன் மற்றும் அரிமா சங்கத்தின் பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, மாகாளி ஆறுமுகம், கே.குமாரவேல், எல்.சாத்தப்பன், பொ.மறக்கண்ணு உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் என்.கிரிஜா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.