/

பழனி கொடைக்கானல் மலையடிவாரத்தில் உலகநலன் மற்றும் மழை வேண்டி யாகம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததன் விளைவாக கடும் வறட்சி நிலவி வருகிறது.  இதனால் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. மழைவேண்டி

News image
Updated On :10 மே 2014, 11:20 am

என்.​ அங்​கு​பாபு

பழனி கொடைக்கானல் மலையடிவாரத்தில் உலகநலன், மழை வேண்டி சிறப்பு யாகம் வளர்த்தப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததன் விளைவாக கடும் வறட்சி நிலவி வருகிறது.  இதனால் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. மழைவேண்டி தமிழக அரசு கடந்த வாரம் தமிழக கோயில்களில் யாகம், பூஜைகள் நடத்த உத்திரவிட்டது. இந்நிலையில் பழனி அருகே கொடைக்கான்ல மலையடிவாரத்தில் கூடலூர் மகாசக்தி பீடம் சுந்தரவடிவேல் சுவாமிகள் தலைமையில் பிரம்ம ராஜமுத்திரை யாகம் வளர்த்தப்பட்டது.  உலகநலன், மழை வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் 10 கிலோ ஏலக்காய், 10 கிலோ நெய், 216 வகையான மூலிகைகள், 27 வகை வாசனை திரவியங்கள் ஊற்றப்பட்டு யாகநிறைவில் பழங்கள், பூக்கள், பதார்த்தங்கள் பூர்ணாஹூதி செய்யப்பட்டது. 

யாகம் குறித்து சுந்தரவடிவேல் சுவாமிகள் கூறுகையில், யாகம் என்பது மந்திர உச்சாடனம் மட்டுமல்ல.  அறிவியல் ரீதியாகவும் வான்வெளியில் மாற்றங்கள் செய்ய யாகம் பயன்படுகிறது.அதனால் தான் பழங்காலங்களில் அதிக அளவில் யாகங்களை அரசர்கள் நடத்தினர். 470 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய், ராகு கிரகங்கள் வீடுமாறி நீசத்தன்மை அடைந்துள்ளது.  இதனால் இயற்கை மாற்றமடைந்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது.  இதற்காக யாகம் நடத்தப்பட்டுள்ளது. வான்வெளியில் ஓசோன் மண்டல பாதிப்பால் பொதுமக்களுக்கு புதுவித புற்றுநோய்கள் வரவுள்ளது. இந்த நோய் பாதிப்பை நீக்க பழனியில் உள்ள அனைத்துலக சித்தர் மேம்பாட்டு மையம், மூலிகை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

யாகபூஜையில் நிறைவில் யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், எம்ஆர்எப் சிவசாமி, சித்தர் மூலிகை ஆராய்ச்சி மைய தலைவர் மாதா குருஜி, கம்பம் வீட்டுவசதி சங்க தலைவர் உதயமுருகன், அறக்கட்டளை நிர்வாகிகள் கடலூர் அறிவழகம், மதுரை வீரய்யா, ஆண்டிபட்டி மெட்டல்ராஜ், மதுரை வீரய்யா, யாக அமைப்பாளர் விருதுநகர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.