/

பழனி அருகே இரவிமங்கலம் குளத்தில் வருவாய்துறை, பொதுப்பணித்துறை உதவியோடு கரையை உடைத்து மண் திருட்டு

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் இருந்து பெரியம்மாபட்டி செல்லும் வழியில் இரவிமங்கலம் குளம் உள்ளது.  சுமார் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தால் சுமார் இரண்டாயிரத்துக்கும்

News image
Updated On :12 மே 2014, 3:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே இரவிமங்கலம் குளத்தில் உரிமகாலம் முடிந்தும் தொடர்மண் திருட்டால் சுமார் 20 அடி ஆழத்துக்கு இயந்திரங்களால் மண் தோண்டப்பட்டு திருடப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் இருந்து பெரியம்மாபட்டி செல்லும் வழியில் இரவிமங்கலம் குளம் உள்ளது.  சுமார் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.  தற்போது பருவமழை பொய்த்த நிலையில் குளம் வரண்டு போய் உள்ளது.  இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இக்குளத்தின் கரைகள் சுமார் ஐம்பது இலட்சம் மதிப்பீட்டில் எடுத்து கட்டப்பட்டது.  குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் குளத்தில் இருக்கும் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள மாவட்ட கனிம வளத்துறை திண்டுக்கல்லை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 9ம் தேதியோடு அனுமதி காலம் முடிந்து விட்ட நிலையில் தற்போது தொடர்ந்து இங்கிருந்து மண் அள்ளப்பட்டு வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.   மண் அள்ளுவதற்காக குளத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கரை சுமார் 20 மீட்டர் அகலத்துக்கு உடைக்கப்பட்டுள்ளது.  வழங்கப்பட்ட அனுமதி உத்திரவை மீறி பல இடங்களிலும் சுமார் 20அடி ஆழத்துக்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. தவிர ஒரே அனுமதி உத்திரவை வைத்துக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட முறை மண் லாரிகளில் அள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. 

இதுகுறித்து பழனி வருவாய் துறையினருக்கும், பொதுப்பணித்துறைக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் பலமுறை புகார் வழங்கியும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நடைபெறும் மண்கடத்தலை கண்டித்து  கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ரோடு மறியலிலும் ஈடுபட்டனர்.  இதுகுறித்து விவசாயி மாரிமுத்து என்பவர் கூறும்போது, மண் அள்ளுவதால் குளம் ஆழமாகிறது என பொதுப்பணித்துறை கூறிக்கொண்டு பல இடங்களிலும் ஆள்விழுங்கி பள்ளங்களை தோண்ட உதவியுள்ளனர்.  கடைக்கோடியில் தோண்டு பள்ளத்தால் குளத்தில் இருந்து செல்லும் தண்ணீர் கடைமடைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.  முறையாக குறிப்பிட்ட அளவுக்கு குளம் முழுக்க சரிசமமாக தோண்டினால் பரவாயில்லை.  மேலும், பல இலட்சம் மதிப்பிலான கரையை உடைத்து சேதம் செய்துள்ளனர்.

அதிகாரிகள் யாரிடம் சொன்னாலும் எதுவும் நடைபெறுவதில்லை. மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் குளம் சேதமடைவதோடு, மழை காலத்தில் நீரை தேக்க முடியாமல் போய்விடும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.