பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மருத்துவம், வேளாண்மை, பொறியியல் படிப்புகளுக்கு தமிழகஅரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். எப்பிபிஎஸ், பிடிஎஸ், பிஇ, பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், 62 படிப்பு மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்பிற்கு 150 மாணவர்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 100 மாணவர்களும் சேர்க்கப்படவுள்ளனர். மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.