சிதம்பரம் அருகே நாய் கடித்து மயில் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே சம்பந்தம் கிராமத்தில் வயல்வெளியில் நாய்கள் கடித்து காயமுற்று மயில் ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் எல்.


சிதம்பரம் அருகே நாய் கடித்து காயமுற்று கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மயில் செவ்வாய்க்கிழமை இறந்தது.
சிதம்பரம் அருகே சம்பந்தம் கிராமத்தில் வயல்வெளியில் நாய்கள் கடித்து காயமுற்று மயில் ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார், வணக்காப்பாளர் பழனிவேல் மற்றும் வனத்துறையினர் சென்று மானை மீட்டு புவனகிரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் இறந்தது. பின்னர் வனத்துறையினர் மயிலை பிரேத பரிசோதனை செய்து புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.
பிடிபட்ட குரங்குகள்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை வள்ளலார் நகரில் குரங்குகள் வீடுகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் அங்கு சென்று 10 குரங்குகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து, வேப்பூர் காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...