விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனைவியின் காலை வெட்டி தனியே எடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி மகள் இசக்கியம்மாள் (27). இவருக்கும் படிக்காசுவைத்தான்பட்டி பேச்சிமுத்து (30) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்

News image
Updated On :13 மே 2014, 9:17 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் காலை வெட்டி தனியே எடுத்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி மகள் இசக்கியம்மாள் (27). இவருக்கும் படிக்காசுவைத்தான்பட்டி பேச்சிமுத்து (30) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உண்டு. பேச்சிமுத்து மில் கூலி தொழிலாளி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் இசக்கியம்மாள் தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை கொத்தங்குளம் சென்ற பேச்சிமுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த தனது மனைவி இசக்கியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவரது ஒரு கால் மற்றும் ஒரு கையின் மணிக்கட்டு தனியே வந்தது. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கால் மற்றும் மணிக்கட்டை தனியே ஒரு பாலித்தின் பையில் போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கியம்மாளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இசக்கியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் பேச்சிமுத்துவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.