பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: நெல்லையில் விநியோகம் தொடங்கியது

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூாியில் மருத்துவப் படிப்புக்களான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. கல்லூரியில் 1900 விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.ஆர். ராஜசேகர் தெரிவித்தார்.

News image
Updated On :14 மே 2014, 8:06 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூாியில் மருத்துவப் படிப்புக்களான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. கல்லூரியில் 1900 விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.ஆர். ராஜசேகர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, விழுப்புரம், தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம், செங்கல்பட்டு, தர்மபுரி, தேனி, திருச்சி மருத்துவக் கல்லூரிகள் உள்பட 19 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2555 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவிகிதம் அதாவது 383 இடங்களில் நுழைவுத் தேர்வு, அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் நிரப்பப்படுகிறது. 

எஞ்சியுள்ள 2172 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் 15 இடங்கள் போக 85 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம்.ஆர். ராஜசேகர், மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 க்கு வரைவோலை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர் தங்களது சாதிச் சான்றினை சமர்ப்பித்து

இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில் 23 இடங்கள் போக 127 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும். இக்கல்லூரிக்கு 1900 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. இம்மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பி.டி.எஸ். படிப்புக்கு தனி விண்ணப்பம் கிடையாது என்றார் அவர். பேட்டியின்போது, கல்லூரி துணை முதல்வர் என்.திருமணிபாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.