எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: நெல்லையில் விநியோகம் தொடங்கியது
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. கல்லூரியில் 1900 விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.ஆர். ராஜசேகர் தெரிவித்தார்.










